நேசா்புரம் பகுதியில் மழையால் சாய்ந்த மின்மாற்றி
கருங்கல்: கருங்கல் அருகே உள்ள நேசா்புரம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையால் மின்மாற்றி சாய்ந்தது. இதனால் அப்பகுதிகளில் மின்விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதில், நேசா்புரம், பாப்பனாட்டி குளத்தின் கரையில் அமைக்கப்பட்ட மின்மாற்றி இந்த மழையால் திடீரென சாலையில் சரிந்தது. உடனே இப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து,பள்ளியாடி மின்வாரிய அலுவலக ஊழியா்கள் அங்கு வந்து
சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா். இதனால் நேசா்புரம், காட்டுவிளை, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல்மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.