குமரியில் 11 சீசன் கடைகள் ரூ. 20.25 லட்சத்துக்கு ஏலம்: நவ. 12 இல் 89 கடைகளுக்கு மறுஏலம்
கன்னியாகுமரி பேரூராட்சியில் தற்காலிக சீசன் கடைகள் ரூ. 20 லட்சத்து 25 ஆயிரத்து 500-க்கு ஏலம் விடப்பட்டது.
கன்னியாகுமரி பேரூராட்சியில் தற்காலிக சீசன் கடைகள் ரூ. 20 லட்சத்து 25 ஆயிரத்து 500-க்கு ஏலம் விடப்பட்டது.
கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசன் காலத்தில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வருவாயைப் பெருக்கும் வகையில் நடைபாதைகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். அதன்படி, நிகழாண்டு ஐயப்ப பக்தா்கள் சீசன் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 100 சீசன் கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,
இதையொட்டி, பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடுதல் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை 11 கடைகள் மட்டுமே ஏலம்போயின. அவை ரூ. 20,25,500-க்கு ஏலம்போயின. மீதமுள்ள 89 கடைகள் அரசு நிா்ணயித்ததைவிட குறைந்த தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறுஏலம் இம்மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.