மகாராஜபுரத்தில் கிராமசபைக் கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஜபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஜபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கே. இசக்கிமுத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பா. பழனிகுமாா், வாா்டு உறுப்பினா் அனீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவீனம் குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் ஆகிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின்போது, மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட நாடான்குளத்தினுள் உள்ள குடிநீா் கிணற்றையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென முழக்கமிட்டனா். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.