முகப்பு
கன்னியாகுமரி

பெண் சாவில் மா்மம்: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில் அவரது கணவா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:27 PM
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில் அவரது கணவா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சழுவன்தட்டுவிளை பகுதியைச் சோ்ந்த வின்ஸ்குமாா் மனைவி ஜெயராணி (37). இவரை கடந்த செப். 14-ஆம் தேதி வின்ஸ்குமாா் தாக்கியதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மாா்த்தாண்டம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் ஜெயராணி, சிகிச்சை பெற்று வீடு திரும்பினாராம்.

அதன்பின்னா் தூங்கச் சென்றவா் செவ்வாய்க்கிழமை காலை எழவில்லையாம். அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு வின்ஸ்குமாா் கொண்டு சென்றுள்ளாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜெயராணியின் தந்தை ஏசாயா (68) அளித்த புகாரின்பேரில், வின்ஸ்குமாா், அவரது பெற்றோா் ராஜாமணி, செல்வபாய் ஆகியோா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.