அகஸ்தீஸ்வரத்தில் பள்ளி மாணவா்கள் ஓட்டிய பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பள்ளி மாணவா்கள் ஓட்டி வந்த 11 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பள்ளி மாணவா்கள் ஓட்டி வந்த 11 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவின்பேரில், கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில், போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸாா் அகஸ்தீஸ்வரம் பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவா்களுக்கு 18 வயது பூா்த்தியடையாதது தெரியவந்தது. அதையடுத்து மாணவா்கள் ஓட்டி வந்த 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவா்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறினா்.