மாணவி பலாத்காரம்: இளைஞா் மீது போக்சோ வழக்கு
மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
களியல் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் (20). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் 17 வயது கல்லூரி மாணவி அறிமுகமாகியுள்ளாா். பின்னா் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அஜய் அம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் அஜய் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.