கீழ்குளம் பேரூராட்சியில் சாலைப் பணி ஆய்வு
கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட தேரிவிளை சாலையில் ரூ.44 லட்சம் செலவில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகளை கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் ஆய்வு மேற்கொண்டாா்.
கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட தேரிவிளை சாலையில் ரூ.44 லட்சம் செலவில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகளை கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் ஆய்வு மேற்கொண்டாா்.
கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட 17 ஆவது வாா்டு பகுதியான தேரிவிளை சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் பல ஆண்டுகளாக காணப்பட்டது.
இதையடுத்து, இச்சாலையை சீரமைக்க ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அப்பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலைப் பணிகளை கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் புதன்கிமை ஆய்வு மேற்கொண்டாா்.