கன்னியாகுமரியில் மகளிா் திட்டம் சாா்பில் வணிக அரங்குகள்
கன்னியாகுமரி மாவட்ட மகளிா் திட்டத்தின் சாா்பில், காந்தி நினைவு மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள வணிக அரங்குகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட மகளிா் திட்டத்தின் சாா்பில், காந்தி நினைவு மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள வணிக அரங்குகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த கண்காட்சியில் 25 கடைகள் மற்றும் 48 மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களான சணல் பொருள்கள், துணிப் பைகள், ஆயத்த ஆடைகள், சிறுதானிய உணவுப் பொருள்கள், தின்பண்டங்கள், சங்கு பொருள்கள், தேன், ஜுஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி நவ.4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் சா.பத்ஹூமுகம்மதுநசீா், மகளிா் திட்ட உதவி அலுவலா்கள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளா் தங்கராஜ், சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.