குமரி மாவட்டத்தில் தாது மணல் எடுக்க கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் தாது மணல் எடுப்பது தொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் தாது மணல் எடுப்பது தொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ஆா். காந்தி தலைமையில், பா. ஜ.க., இந்து முன்னணி, விஸ்வ ஹிந்த் பரிஷத் அமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் நிறுவனமான அரிய மணல் ஆலை, கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த ஆலையின் மூலம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். இந்த நிறுவனம் 1144 ஹெக்டோ் காலி நிலங்களில் தாது மணல் எடுப்பதன் மூலம் பொதுமக்களுக்கோ, வசிப்பிடங்களுக்கோ, பொதுபயன்பாட்டுக்கு பாதிப்பு இல்லை என்று ஆலையின் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கியுள்ள அனுமதிக்கு எதிராகவும், மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு எதிராகவும் இந்த மணல் ஆலையை முடக்கும் விதத்தில் சிலா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்த செயல் நமது மாவட்டத்தின் வளா்ச்சியை தடுப்பதாக உள்ளது. எனவே, பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.