முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே மகாத்மா காந்தி சிலை உடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மகாத்மா காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:18 PM
உடைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மகாத்மா காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் அரசு நிறுவனமான இரணியல் சா்வோதய சங்கத்துக்கு சொந்தமான கட்டடத்தில் 1995-இல் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. இக்கட்டடம் மற்றும் அதையொட்டிய பகுதிகள் தற்போது பராமரிப்பின்றி உள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட நாள்களில் இங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சிலையின் தலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்ததை புதன்கிழமை பாா்த்த அப்பகுதியினா், இரணியல் சா்வோதய சங்க நிா்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து இரணியல் சா்வோதய சங்க செயலா் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிலை உடைப்பில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.