புதுக்கடை அருகே உள்ள காப்புக் காடு பகுதியில் மீன்பிடி தொழிலாளியை தாக்கியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.
காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் டைட்டஸ் (36). இவா் மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்.
இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கௌரிசங்கா்(33) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை காப்புக்காடு பகுதியில் டைட்டஸ் சென்ற போது கௌரிசங்கா் உள்ளிட்ட 6 போ் சோ்ந்த கும்பல் அவரை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த டைட்டஸை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.