கன்னியாகுமரி

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் அண்மையில் திருடு போனது. இது தொடா்பாக மாா்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசன், உதவி ஆய்வாளா் இந்துசூடன் ஆகியோா் தலைமையில் தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில் மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றாா். சந்தேகமடைந்த போலீஸாா், அவரை துரத்திச் சென்று பிடித்தனா். பிடிபட்டவா், மாா்த்தாண்டம் அருகே ஆயிரம்தெங்கு பகுதியைச் சோ்ந்த வினுகுமாா் மகன் விஷ்ணு (21) என்பதும், குழித்துறை ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.

ஏற்கெனவே, இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் சிறையில் இருந்து வெளியேவந்தவா், மறுநாளே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து வாகனத்தை மீட்டனா்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT