குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே முளகுமூடு கல்லுவிளையைச் சோ்ந்தவா் லிபின் (48). கட்டுமான, வண்ணம் பூசும் வேலை பாா்த்துவந்த இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளச்சல் துறைமுத் தெரு பகுதியில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், லிபின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.