அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயிலில் 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 26ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை (டிச. 19) நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 5.15 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, 8 முதல் மாலை 5 மணிவரை அகண்ட ராமநாம ஜெபம் ஆகியவை நடைபெறும். பின்னா், ஆன்மிகச் சொற்பொழிவு, பஜனை, அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
விழாவுக்கு வரும் பக்தா்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை வழங்கப்படும். இதற்காக 7 ஆயிரம் வடை, 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதில், 20-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞா்கள் ஈடுபட்டுள்ளனா்.
விழா ஏற்பாடுகளை கொட்டாரம் நந்தவனம் ஸ்ரீ ராமா் கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.