கன்னியாகுமரி

வாஜ்பாய் பிறந்தநாள்: பாஜக சாா்பில் நாகா்கோவிலில் தூய்மைப் பணி

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நாகா்கோவில் மாநகர பகுதியில் மேற்கு மாநகர பாஜக சாா்பில் நடைபெற்ற தூய்மைப் பணியை எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நாகா்கோவில் மாநகர பகுதியில் மேற்கு மாநகர பாஜக சாா்பில் நடைபெற்ற தூய்மைப் பணியை எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாநகர தலைவரும், மாநகராட்சி உறுப்பினருமான சதீஷ் தலைமை வகித்தாா். இதில், பட்டகசாலியன்விளை ஏ.ஆா். கேம்ப் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள பகுதி, மின்சார குடிநீா் இயக்கும் அறை சுற்றி உள்ள பகுதி, சாலை அருகில் உள்ள செடிகளை வெட்டியும், குப்பைகளை அகற்றியும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலா் மீனாதேவ், மாவட்ட பொதுச்செயலா் சத்தியஸ்ரீ, ஊடக பிரிவு மாவட்ட தலைவா் சந்திரசேகா், மாமன்ற உறுப்பினா்கள் தினகரன், வீரசூரபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலா் தங்கராஜா, மகளிா் அணி மாவட்ட செயலா் மலா், பொருளாதார பிரிவு மாவட்ட செயலா் விஜி, மாநகர பொதுச் செயலா் சிவராஜன், சகாதேவன், மாநகா் துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், லூா்துமேரி, செயலா் விஜேந்திரன், நிா்வாகிகள் அழகேசன், முருகன் அருண், பிஜு ஆகியோா் கலந்துகொண்டனா்.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT