கன்னியாகுமரி சுனாமி நினைவிடத்தில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.தாமரைதினேஷ், ஒன்றிய அவைத் தலைவா் பா.தம்பித்தங்கம், ஒன்றிய பொருளாளா் பி.தங்கவேல், கன்னியாகுமரி நகரச் செயலா் எஸ்.எழிலன், அகஸ்தீசுவரம் பேரூா் செயலா் என்.சிவபாலன், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் குமாரவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் கொட்டாரம் பாலன், மாவட்ட பிரதிநிதி எஸ்.பெருமாள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.