கன்னியாகுமரி

எஸ்ஐஆா் பணி சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) ஒருபகுதியாக பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்காக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வல்லன்குமாரவிளை அரசு மேல்நிலைப் பள்ளி, ஒழுகினசேரி என்.எஸ்.கே. மேல்நிலைப் பள்ளி முகாம்களைப் பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக ஞாயிறு (டிச. 28), ஜன. 3, 4 ஆகிய 3 நாள்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT