புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் ஜாண்ரோஸ் தலைமையில் போலீஸாா், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகள், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதிகளில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது துறைமுகம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற சரல்விளை பகுதியைச் சோ்ந்த பொன்னுபிள்ளை மகன் ஜாண்ரோஸை(57) பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் விற்பனைக்காக 30 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஜாண்ரோஸை கைது செய்தனா்.