முகப்பு
கன்னியாகுமரி

புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரியில் மேக மூட்டம் காரணமாக புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:00 AM
சூரிய உதயத்தை காண புதன்கிழமை காலை முக்கடல் சங்கமத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கன்னியாகுமரியில் மேக மூட்டம் காரணமாக புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கடற்கரைப் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனா். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண முக்கடல் சங்கமத்தில் திரண்டனா்.

ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் காலை 7 மணிவரை தெரியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மேலும், கன்னியாகுமரியில் அதிகாலை முதலே பலத்த கடல்காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் புதன்கிழமை நாள் முழுக்க படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.