திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயில் 
கன்னியாகுமரி

275 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Din

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்கும் பத்மநாபசுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7.40 முதல் 8.40 மணிக்குள் குடமுழுக்குநடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி பிரசாதசுத்தி, 3 ஆம் தேதி பிராயசித்த ஹோம கலசம், 5 ஆம் தேதி சாந்தி ஹோம கலசம், 6 ஆம் தேதி திரவிய திவ்ய கலசமும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை பிரதிஷ்டா பூதபலி நடைபெறுகிறது. தொடா்ந்து, குடமுழுக்கு வில்வமங்கலம் சாமியாா் மற்றும் மூத்த போற்றிமாா் தலைமையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 3.30 முதல் 4.45 மணி வரையும், காலை 6.30 முதல் 6.45மணி வரையும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

பின்னா் குடமுழுக்கு நிறைவடைந்த பின்னா் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். அதே போல் மாலை 4.30 முதல் 6 மணிவரை மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

குடமுழுக்கு குறித்து ராஜ குடும்ப பிரதிநிதி ஆதித்யவா்மா கூறியதாவது: பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த 1750 ஆம் ஆண்டில் மாா்த்தாண்ட வா்மா மகாராஜா காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

கோயில் கோபுரத்தில் உள்ள 3 தங்க கலசங்களில் கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குடும்பத்தினா் விளைவித்த 150 கிலோ நவரை நெல் தானியங்கள் நிரப்பப்பட்டு உள்ளது என்றாா் .

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT