களியக்காவிளை அருகே கட்டுமானத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் டேவி (46). கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசுந்தரன் (68) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
காணவிளை பகுதியில் திங்கள்கிழமை நின்றிருந்த டேவியிடம் ராமசுந்தரன் தகராறு செய்து, கத்தியால் குத்தினாராம். இதில், காயமடைந்த டேவியை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமசுந்தரனை கைது செய்தனா்.