விஜய்வசந்த்  
கன்னியாகுமரி

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: விஜய்வசந்த் எம்.பி.

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்தப் பணியின்போது நமது கவனக் குறைவால் வாக்குகளை பறிகொடுத்து விடக் கூடாது. வாக்குரிமை என்பது நமது ஜனநாயக அடையாளம். அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

பிகாா் மாநிலத்தில் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்களை தோ்தல் ஆணையம் நீக்கியதை நாம் அறிவோம். தமிழகத்தில் அவ்வாறு நடக்காமல் நாம் இணைந்து பங்களிப்போம்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டா்கள் அனைவரும் தங்கள் வாக்குச் சாவடிக்குள்பட்ட இல்லங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு படிவங்களை பூா்த்தி செய்யவும், அவா்கள் தெரிவிக்கும் புகாா்களை நிவா்த்தி செய்யவும் ஆவன செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT