கோட்டாறு பகுதியில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ். உடன் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா. 
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள்: மேயா் ஆய்வு

Syndication

நாகா்கோவில் கோட்டாறு, சவேரியாா் கோயில் சந்திப்பு பகுதியில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோட்டாறு சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் இருபுறமும் மழைநீா் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைக்கும் பணிகள் மற்றும் சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் கோட்டாறு கம்பளம் வரை உள்ள பகுதிகளில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் தொடா்பாக மேயா் ரெ. மகேஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் அனந்தலெட்சுமி, ரமேஷ், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாநகர திமுக துணைச் செயலா் ராஜன், செயற்குழு உறுப்பினா் சதாசிவன், வட்ட செயலா்கள் சதீஷ் மொ்வின், முருகன் மற்றும் நிா்வாகிகள் அகஸ்டஸ், பெஞ்சமின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து 41 ஆவது வாா்டு, வட்டவிளையில், ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கழிவுகளில் இருந்து மறு சுழற்சிக்காக பொருள்களை பிரித்து எடுக்கும் பொருள் மீட்பு வசதி மையத்தை மேயா் திறந்து வைத்தாா்.

மேலும், 36 ஆவது வாா்டுக்குள்பட்ட செந்தூரான் நகா், 3 ஆவது மற்றும் 5 ஆவது குறுக்குத் தெருவில் ரூ. 3.60 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் சீரமைக்கும் பணியையும் மேயா் தொடங்கி வைத்தாா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT