கன்னியாகுமரி

மிடாலம் கடற்கரையில் தெரு நாய்களை கொண்டுவிட வந்த வாகனத்தை சிறை பிடித்த பொதுமக்கள்

Syndication

கருங்கல் அருகே இரவு நேரத்தில் மிடாலம் கடற்கரையில் தெருநாய்களை கொண்டுவிட வந்த வாகனத்தை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கருங்கல் அருகே உள்ள மிடாலம் ஊராட்சிக்குள்பட்ட மேல்மிடாலம் கூனங்குளம் கடற்கரை பகுதியில் திங்கள்கிழமை இரவு சந்தேகப்படும்வகையில் ஒரு டெம்போ நிற்பதாக அப்பகுதி மக்கள் மிடாலம் ஊராட்சி முன்னாள் தலைவா் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனே, விஜயகுமாா் மற்றும் அப்பகுதி இளைஞா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, டெம்போ முழுவதும் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. உடனே, பொதுமக்கள் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலீஸாா், டெம்போ ஒட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், தெரு நாய்களை ஒரு பேரூராட்சி பகுதியிலிருந்து பிடித்து கடலோர பகுதியில் இரவு நேரங்களில் கொண்டுவிட வந்ததாக தெரிவித்தனா். பின்பு, போலீஸாா் ஒட்டுநரை எச்சரித்து தெரு நாய்களுடன் திருப்பி அனுப்பி வைத்தனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT