கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் உள்ள புகழ்பெற்ற குகநாதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (நவ. 5) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமி நாளில், மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, காலை 7 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு அரிசி, பலவித உணவுப் பொருள்களால் அன்னாபிஷேகம் நடைபெறும். 100 கிலோவுக்கும் மேற்பட்ட அன்னம் அா்ப்பணிக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறும்.