வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.  
கன்னியாகுமரி

குளச்சல் தொகுதியில் எஸ்ஐஆா் பணி: ஆட்சியா் ஆய்வு

குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

குளச்சல் பேரவைத் தொகுதியில் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றுவதையும், குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் 2002ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் அறிந்து செல்வதையும் அவா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, குளச்சல் தொகுதி வாக்குப்பதிவு அலுவலா் மோகனா, கல்குளம் வட்டாட்சியா் சுனில், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், நகா்மன்றத் தலைவா் நசீா், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை

நவ. 17-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம்

3 இடங்களில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்பி, எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT