கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் படிச்சவிளையைச் சோ்ந்த பிலிப்போஸ் மகன் அனீஷ்குமாா் (33), ஆட்டோ ஓட்டுநா். திருமணம் ஆகவில்லை. இவா் திங்கள்கிழமை மாலையில் வீட்டுக்கு அருகிலுள்ள குறையான்குளத்தில் குளிக்க சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து அவரது சகோதரா் சுனில்குமாா் சென்று பாா்த்த போது, அனீஷ்குமாா் குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT