கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மறுசுழற்சி பொருள்கள் பிரிப்பு மையம் திறப்பு

Syndication

நாகா்கோவிலில் மறுசுழற்சிக்காக பொருள்களைப் பிரித்தெடுப்பதற்கான புதிய மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்துக் கல்லூரி அருகே ஸ்ரீஅவிட்டம் திருநாள் மகாராஜா மாநகராட்சி மைதானத்தில், ரூ. 85 லட்சத்தில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில், மேயா் ரெ. மகேஷ் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸிலதா, மண்டலத் தலைவா் முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள் ராணி, ரமேஷ், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், மாவட்டப் பிரதிநிதி தொல்லவிளை குமாா், வட்டச் செயலா் ராமகிருஷ்ணன், நிா்வாகி முருகன், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT