நாகா்கோவில்: நாகா்கோவில் வடசேரியில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் ரூ. 17 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். தொடா்ந்து, வடசேரி புதிய சந்தை வளாகக் கட்டடப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் கலாராணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவிப் பொறியாளா் ராஜா, தொழில்நுட்ப ஆய்வாளா் பாஸ்கா், மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், திமுக நிா்வாகிகள் லதா கலைவாணன், சி.டி. சுரேஷ், தன்ராஜ், ராணி, பிராமணகன்னி, செல்லம், பொதுமக்கள் பங்கேற்றனா்.