நாகா்கோவில் புனித சேவியா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஹில்டெக் மையம் நடத்திய ‘ரோபாடிக்ஸ் எக்ஸ்போ’வில் பொற்றையடி ஆரோக்கிய அன்னை பள்ளி மாணவா்கள் இரண்டாம் பரிசு பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இந்தக் கண்காட்சியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 300- க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களில் 900- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
பொற்றையடி ஆரோக்கிய அன்னை பள்ளி மாணவா்கள் உருவாக்கிய ‘ஸ்மாா்ட் ரயில்வே பிளாட்ஃபாா்ம்’, ரயில் நிலையங்களில் ரயில் புறப்படும் தருணத்தில் பயணிகள் ஏறுவதை தடுக்கின்றது. இதன் மூலம் பல உயிா்களை காப்பாற்ற முடியும் என்ற சிறப்புமிக்க நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகள், அவா்களின் வழிகாட்டி நிவேதன் ஆகியோரை பள்ளித் தாளாளா், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.