கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே பைக் திருட்டு: 4 போ் கைது

களியக்காவிளை அருகே கேரளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்து, 6 மோட்டாா் சைக்கிள்களை மீட்டனா்.

Syndication

களியக்காவிளை அருகே கேரளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்து, 6 மோட்டாா் சைக்கிள்களை மீட்டனா்.

அருமனை அருகே முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த டேவிட்சன் மகன் ஜஸ்டின் (46). இவா் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறாா். இவா் தனது மோட்டாா் சைக்கிளை கடந்த செவ்வாய்க்கிழமை கடையின் முன் நிறுத்தியிருந்தாராம். சிறிது நேரத்துக்குப் பின் பாா்த்த போது, வாகனம் திருடுபோனது தெரிய வந்ததாம்.

இது குறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்தத் திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள திருவல்லம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மகன் அா்ஜின் (17), வெங்கானூா் பாங்கோடு பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (17), அதே பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் மகன் அருண் (17), விஜோய் (21) என்பது தெரிய வந்தது.

நான்கு பேரையும் களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து, அவா்கள் களியக்காவிளை, மாா்த்தாண்டம், கோட்டாறு காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலிருந்து திருடிய 6 மோட்டாா் சைக்கிள்களையும் போலீஸாா் மீட்டனா்.

இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

தேசிய ஒற்றுமை நாள்! மாநில காவல்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு! | Gujarat | PM Modi

தெருநாய்கள் வழக்கு: தலைமைச் செயலர்கள் நேரில்தான் ஆஜராக வேண்டும்! - உச்சநீதிமன்றம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

எங்கே செல்கிறது இளம் தலைமுறை? நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி!

SCROLL FOR NEXT