அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகா் கோயில், பூஜைபுரைவிளை சமாதானபுரம், சுக்குப்பாறை தேரிவிளை, சரவணந்தேரி, நேதாஜி காலனி, நாடான்குளம், மாடுகட்டிவிளை, வடுகன்பற்று, கவற்குளம், சந்தையடி, இடையன்விளை, வெள்ளையந்தோப்பு, கன்னி விநாயகா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரப் பயணத்தை அவா் மேற்கொண்டாா்.
பிரசாரத்தின் போது, அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா்கள் பா. தாமரை தினேஷ், எஸ். ஜெஸீம், ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், பேரூா் செயலா் என். சிவபாலன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பி. பாலமுருகன், நிா்வாகிகள் நீலபெருமாள், ரமேஷ், குமாரவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement