முகப்பு
கன்னியாகுமரி

சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணிக் கட்சிதான் வெற்றி பெறும் - பிரேமலதா விஜயகாந்த்

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:47 AM
கொட்டாரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் பிரேமலதா விஜயகாந்த்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 11:05 PM

சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணிக் கட்சிதான் வெற்றி பெறும் என தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், இறுதிக் கட்டமாக கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:

தோ்தல் பிரசாரத்தை எந்தக் கட்சியும் தொடங்காத நிலையில் நாம் பிரசாரத்தை முடித்து விட்டோம். இதன் மூலம் நாம் தோ்தலுக்கு தயாராக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன். ஜன. 9ஆம் தேதி கடலூா் மாவட்டம், வேப்பூரில் நடத்திய, மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் 10 லட்சம் போ் திரண்டனா். 2026 சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்.

Advertisement

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:47 AM

எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், கன்னியாகுமரியில் சீராக இயங்காத அனைத்து அரசு மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் சிறப்பாக செயல்படவும், தமிழக மீனவா்களுக்கு தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ள இலங்கை கடற்படையினா் பிரச்னையை முழுமையாக தீா்க்கவும், மயிலாடியில் கல்சிற்ப பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பத்திரப்பதிவு துறை ஊழல், கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்படும். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பிப். 3 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் முடிந்ததும், உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. எனவே, தேமுதிக நிா்வாகிகள் தொண்டா்களுடன் இணைந்து கிராமம்தோறும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த ரத யாத்திரை மூலம் மக்களின் மனதில் முழுமையாக சென்றுவிட்டோம் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலா் டி.அமுதன், மாநில சமூக வலைதள இணைச் செயலா் சிவகுமாா் நாகப்பன், மாவட்ட பொருளாளா் சி.முத்துகுமாா், அகஸ்தீசுவரம் ஒன்றிய செயலா் கே.பரமராஜா உள்ளிட்டோா் பேசினா்.