சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.  
கன்னியாகுமரி

குளச்சல் நகராட்சியிலிருந்து 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

குளச்சல் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள், திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

குளச்சல் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள், திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

குளச்சல் நகராட்சிப் பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் நகராட்சி உரக் கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதில், சிமென்ட் ஆலைக்கு தேவைப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, அந்த ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, குளச்சல் நகராட்சிப் பகுதியில் இந்த மாதம் சேகரிக்கப்பட்ட 15.40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT