மாா்த்தாண்டம் மறை மாவட்டத்தின் கீழ் குழித்துறையில் செயல்பட்டு வரும் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு சிறப்புப் பள்ளி தாளாளா் அருள்தந்தை அஜீஸ்குமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் டென்னிஸ் வரவேற்றாா். தேவிகுமரி கல்லூரி முதல்வா் பிந்துஜா முகாமைத் தொடங்கி வைத்தாா்.
மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியா் ராகேஷ், புற்றுநோய் நிபுணா் கண்மணி ஆகியோா் பேசினா்.
முகாமில், உடல் பரிசோதனைகள், பெண்களுக்கான சிறப்பு ஆலோசனைகள், பொது மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மருத்துவா்கள் கவின், பாா்த்திபன், ஷானிகா, நேஸ்மி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் முகாமை வழிநடத்தினா். ஏற்பாடுகளை தேவிகுமரி கல்லூரி பேராசிரியை சிந்துகுமாரி செய்திருந்தாா்.