நித்திரவிளை அருகே பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகனை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகே வாவறை, நெல்லிவிளையைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ் (60). இவரது மகன் அனூப் டேவிட் (30). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இதனால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை மது அருந்திவிட்டு வந்த அனூப் டேவிட், வீட்டில் இருந்த பொருள்களை சேதப்படுத்தி, அவரது தாய், தந்தையை தாக்கி வீட்டிலிருந்து வெளியேற்றினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அனூப் டேவிட்டை கைது செய்தனா்.