சேலத்தில் தவெக தலைவர் விஜய் DPS
தமிழ்நாடு

வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்களே... என் வீடு எது தெரியுமா? சேலத்தில் விஜய் பேச்சு!

என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்களே என் வீடு எது தெரியுமா என சேலத்தில் விஜய் பேசியது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சேலத்தில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் விஜய், என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்களே, என் வீடு எது என்று தெரியுமா? என்று கேட்டு தன்னுடைய பேச்சைத் தொடங்கியிருக்கிறார்.

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார்.

அவர் பேசுகையில், இந்த உத்வேகம்தான் ஒரு சக்தியைக் கொடுக்கும். அது மட்டுமல்ல, மற்றவர்கள் நம்மை ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில், நம்மைக் குறைவாக எடைபோடும் நேரத்தில் தான் உத்வேகம் பிறக்கும். நாம் யார் என்று காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும். எந்த விஷயத்தில் நம்மை கிண்டலும் கேலியுமாகப் பேசினார்களோ அந்த விஷயத்தில் நம்மை நேர்மறையாக மாற்றுவதற்கு உத்வேகம் வரும். அங்கிருந்துதான் அந்த சக்தி உருவாகிறது என்று பேசினார்.

என்னைப் பற்றி பேசிய அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாமா? ஏ, விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். அவர்களுகு என் வீடு எதுன்னு தெரியுமா? எங்க இருக்குன்னு தெரியுமா? என்னை சீண்டிப் பார்ப்பதாக நினைத்து கேலியும் கிண்டலுமாக பேசுபவர்களுக்குச் சொல்கிறேன். தமிழ்நாடு உங்களுக்கு மாநிலமாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாடுதான் என் வீடு

என் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா? 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் வீடு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் என் சொந்தம். தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக அவர்கள் கூட நிற்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். அந்த எட்டு கோடிப் பேருக்கும் எல்லாமுமாக நிற்கப் போவது இந்த விஜய் தான். எல்லாம் கொடுக்கப் போவதும் நான்தான்.

இன்று உங்களிடம் வாக்கு கேட்டு மட்டும் வரவில்லை. ஆனா, இன்று உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். உங்களுக்காக நீதி கேட்கத்தான் வந்தேன். ஆனால் உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தேன். மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தது தவறா?

எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தது தவறா? பொதுக்கூட்டம் நடத்த மற்றவர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள். மற்ற கட்சிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் எனக்கு கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டார்கள், கொடுக்கவும் விட மாட்டார்கள். இதில் என்ன நியாயம். மக்களை நான் சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் விட மாட்டார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மற்றவர்களுக்கு கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறை இருக்கும். எனக்கு மட்டும் ஸ்டாலின் சார் வழிகாட்டு நெறிமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறினார்.

சேலத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறது. காலை முதலே விஜயைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தார்கள். ஐந்தாயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. சரியான நேரத்துக்குள் விஜய் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த நிலையில், 12.30 மணிக்குள் கூட்டம் தொடங்கியது.

சேலம் தவெக நிர்வாகிகள் பேசிய நிலையில் விஜய் பேசத் தொடங்கினார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தவெக தொண்டர்கள் விஜய் பேச்சைக் கேட்டனர்.

About Vijay's speech in Salem, "They're telling me to get out of the house, do you know where my house is?"

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை: ராதிகா

ஸ்டாலின் ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்! விஜய்

எப்படி இருக்கும் இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால்...! - விஜய் பேச்சு

துரந்தரால் திட்டமிட்ட வெளியீட்டிலிருந்து விலகும் திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT