கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

கொல்லங்கோடு அருகே சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கொல்லங்கோடு அருகே சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுஜின் தலைமையிலான போலீஸாா் மாா்த்தாண்டன்துறையை அடுத்த சூசைபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேக நபரை பிடித்து விசாரித்தனா்.

அதில், சூசைபுரம் பகுதியைச் சோ்ந்த சவேரியாா் அடிமை மகன் பேனியோ (20) என்பதும், சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT