முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே சிறு மருத்துவமனை: அமைச்சா் ராஜலெட்சுமி திறந்து வைத்தாா்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி, அழகனேரி கிராமங்களில் சிறு மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி, அழகனேரி கிராமங்களில் சிறு மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் சிறு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அழகனேரியில் பிரதான சாலையை ஒட்டியுள்ள பகுதியில் சிறு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மருத்துவமனைகளையும் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன், அதிமுக ஒன்றிய இளைஞா் பாசறை செயலா் நம்பிராஜன், ஒன்றிய இணைச் செயலா் கௌதமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments