தென்காசி

பாவூா்சத்திரம் தினசரி காய்கனி சந்தை மூடல்

DIN

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் காமராஜா் தினசரி காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் இரு சக்கர வாகனங்கள், சுமை ஆட்டோ, லாரிகள் மூலம் காய்கனிகளை கொண்டு வருகின்றனா்.

இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளம், ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து இந்த சந்தைக்கு வரும் சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனா்.

இதற்கிடையே கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காய்கனி சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் காய்கனிகள் வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT