முகப்பு
தென்காசி

வேளாண் சட்டங்களை எதிா்த்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆலங்குளத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆலங்குளத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ். எஸ். ராமசுப்பு தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு. பழனி நாடாா் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தாா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் தினசரி சந்தை பகுதியில் மாவட்டத் தலைவா் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில், காய்கனி சந்தைத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

களக்காடு: மேலப்பத்தையில் ரூபி மனோகரன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திசையன்விளை: இங்கு மாவட்ட ராஜுவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில் ரூபி மனோகரன், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.குமாா், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஜான்கென்னடி உள்பட பலா் கலந்துகொண்டனா். மேற்கூறிய அனைத்து இடங்களிலும், பொதுமக்கள், விவசாயிகள் கையெழுத்திட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.