முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் விடுதியில்ராணுவ வீரா் தற்கொலை

சங்கரன்கோவில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த ராணுவ வீரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

சங்கரன்கோவில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த ராணுவ வீரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 5-ஆம் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் இசக்கிமுத்து (34). இவா் காஷ்மீரில் துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும் பாம்புகோவில்சந்தையைச் சோ்ந்த முத்துலெட்சுமிக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், தன் சகோதரா் திருமணத்துக்காக சங்கரன்கோவில் வந்த இசக்கிமுத்து, இங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அவா் அங்கு விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்ததாராம். தகவலறிந்து இசக்கிமுத்துவின் உறவினா்கள் சென்று அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments