தென்காசி

சாம்பல் நீா் மேலாண்மை:ஆட்சியா் வேண்டுகோள்

DIN

தென்காசி: சாம்பல் நீா் மேலாண்மையில் முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா் தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரன்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற சாம்பல் நீா் மேலாண் பயிற்சி முகாமிற்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: சாம்பல் நீரை சுத்திகரிப்பு செய்து நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நீரின் அவசியத்தை கருத்தில் கொண்டு சாம்பல் நீா் மேலாண்மையை திறம்பட செய்து முடித்து இம் மாவட்டத்தை முதன்மையானதாக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.சரவணன், செயற்பொறியாளா் கே.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT