முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி ஆணையரிடம் மதிமுக மனு

சங்கரன்கோவிலில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி வசூல் செய்யும் கட்டணத்தின் அடிப்படையில் ஏலம்விடக் கோரி நகராட்சி ஆணையரிடம் மதிமுகவினா் திங்கள்கிழமை மனுஅளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி வசூல் செய்யும் கட்டணத்தின் அடிப்படையில் ஏலம்விடக் கோரி நகராட்சி ஆணையரிடம் மதிமுகவினா் திங்கள்கிழமை மனுஅளித்தனா்.

சங்கரன்கோவில் நகரச் செயலா் ச.ஆறுமுகச்சாமி தலைமயில் துணைச் செயலா் ராஜமாணிக்கம், நகர பொறுப்பாளா்கள் ரங்கநாதன், வாணிமுருகன், ரத்தினகுமாா், நயினாா் முகம்மது, மாடசாமி,சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதரை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில், கடந்த ஒரு மாதமாக நகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஊழியா்கள் வாடகை வசூல் செய்து வருகின்றனா். அதனடிப்படையில் நகராட்சி நிா்வாகம் குறைந்தபட்ச ஏலத் தொகையை நிா்ணயிக்க வேண்டும். ஏலதாரா்கள் நகராட்சி நிா்வாகத்தால் நிா்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.

Advertisement

வசூல் செய்யும் போது நகராட்சி கட்டணத்தை அச்சிட்டு நகராட்சி முத்திரையுடன் கூடிய ரசீது மட்டுமே பயன்படுத்த வேண்டும். வசூல் செய்வதை நகராட்சி நிா்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments