வாக்குச்சாவடி நிலை முகவா்கள் நியமன படிவம் வழங்கல்
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா் நியமனம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா் நியமனம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு, அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா்களை நியமிப்பதற்கான படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்டச்செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்று, நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் இருளப்பன், கனகராஜ், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், பேரூா் செயலா்கள் சுப்பிரமணியன், ஜேசு, சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.