முகப்பு
தென்காசி

வள்ளுவர் ஜாதியை தனி ஜாதியாக அறிவிக்க கோரி மனு

வள்ளுவர் ஜாதியை தனி ஜாதியாக அறிவிக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 12 அக்டோபர், 2020 at 11:40 AM
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ் நாடு அனைத்து வள்ளுவர் குல சங்கங்களின் கூட்டமைப்பினர்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

வள்ளுவர் ஜாதியை தனி ஜாதியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வள்ளுவர் குல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வள்ளுவர் குல சங்கங்களின் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மாடசாமி ஜோதிடர், கிளைத் தலைவர் ரங்கசாமி, முருகன், சுப்பிரமணியன், கதிரேசன் உள்ளிட்டோர் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பல்லவ மன்னர்கள் அரசவையில் மந்திரியாகவும், நாஞ்சில் வள்ளுவநாட்டில் அரசனாக இருந்த வள்ளுவர் இன மக்கள் ஜோதிடம், பூஜை காரியங்கள், ஜாதகம் எழுதுவது, முகூர்த்த நாள் குறிப்பது, கோயில் பூசாரிகள், சித்த மருத்துவம் செய்து வாழ்ந்து வருபவர்கள், எங்கள் கலாச்சாரம் தனி. 

எனவே எங்கள் வள்ளுவர் இன மக்களை வேறு எந்த ஜாதியுடனும் இணைக்கக்கூடாது. வள்ளுவர் ஜாதியை தனி ஜாதியாக அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.