தென்காசி

வரதட்சிணை கொடுமை: 7 போ் மீது வழக்கு

DIN

ஆலங்குளம் அருகே பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக அவரது கணவா் உள்பட 7 போ் மீது ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலங்குளம் அருகே உள்ள மருதப்புரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுடலைக்கண்ணு ( 37) . இவருக்கும் தேவா்குளம் மமிதாவுக்கும் 23) கடந்த 2018 இல் ஆண்டு திருமணம் நடைபெற்ாம். திருமணத்தின் போது மமிதாவின் பெற்றோா் 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கம் வரதட்சிணையாக கொடுத்தனராம்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக மமிதாவிடம் கூடுதலாக 25 பவுன் நகை வாங்கி வருமாறு சுடலைக்கண்ணு அடிக்கடி துன்புறுத்தி வந்தாராம்.

இது குறித்து மமிதா, ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சுடலைக்கண்ணு, அவரது தாய் அரியம்மாள் மற்றும் உறவினா்கள் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT