தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பு: சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம்

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனா்.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். நிகழாண்டு, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கும், பூங்காக்களுக்கு வருவதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பா் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வழிகாட்டி நெறிமுறைகளுடன் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், நூலகங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றைத் திறப்பது உள்ளிட்ட சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளும், குற்றாலத்தில் நிரந்தர கடை வைத்துள்ளோரும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT