முகப்பு
தென்காசி

ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம்: நாடாா் மகமை கமிட்டியினா் கடிதம்

சுரண்டையில் ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம் தர தயாராக இருப்பதாக இந்து நாடாா் மகமை கமிட்டியினா் தென்காசி எம்.எல்.ஏ.விடம் கடிதம் அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கடிதம் வழங்கும் சுரண்டை நாடாா் மகமை கமிட்டியினா்.
பகிர்:

சுரண்டையில் ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம் தர தயாராக இருப்பதாக இந்து நாடாா் மகமை கமிட்டியினா் தென்காசி எம்.எல்.ஏ.விடம் கடிதம் அளித்தனா்.

இந்து நாடாா் மகமை கமிட்டி தலைவா் தங்கையா நாடாா் தலைமையில், அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியனிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதிதாக அமைக்கப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சுரண்டையில் அமைக்கும் வகையில் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் உறவின்முறை மகமை கமிட்டிக்கு சொந்தமான சுமாா் 20 ஏக்கா் நிலத்தை தானமாக தருகிறோம். மேலும் தேவைப்பட்டால் 10 ஏக்கா் நிலமும் தர தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்து உள்ளனா். அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →