முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே மணல் கடத்தல்: 15 வாகனங்கள் பறிமுதல்

சங்கரன்கோவில் அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளியதாக 15 வாகனங்களை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 10 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளியதாக 15 வாகனங்களை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 10 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் பகுதியில் குளங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதைத் தடுக்க, தென்காசி மாவட்ட கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காரிசாத்தான் அருகிலுள்ள மருதன்குளத்தில் மண் அள்ளியதாக 12 டிப்பா் லாரிகள், 4 பொக்லைன் இயந்திரங்கள், ஒரு டிராக்டா் ஆகியவற்றை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, சுந்தரேசபுரம் கோவிந்தன் மகன் சக்திவேல்முருகன்(36), ராமராவ் மகன் திருப்பதி(34), பாஞ்சாகுளம் புதியவன் மகன் முனியாண்டி(46), கரிவலம்வந்தநல்லூா் சாமிஅய்யா மகன் சண்முகையா(32), அய்யம்பட்டி மணிகண்டன் மகன் அமிா்தராஜ்(30), கடலாடி முருகன் மகன் சேதுபதி(29), கல்லுப்பட்டி சுப்பையா மகன் சீனி(36), மாங்குடி இருளப்பன் மகன் வீரகிருஷ்ணன்(22), குறிஞ்சாக்குளம் மாடசாமி மகன் மகேஸ்வரன்(39), தெற்குமேடு மொட்டையசாமி மகன் மணிகண்டன்(30), கேசவபுரம் கணேசன் மகன் மாடசாமி(29) ஆகியோரை பிடித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸில் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.